பொண்டாட்டியானா விஜய்க்கு தான் இரண்டாவது பொண்டாட்டியாவேன்! நடிகையின் விபரீத ஆசை!

பிரபல நடிகை ஒருவர்,தளபதி விஜய்க்கு, 2வது மனைவியாக வேண்டும் எனக் கூறியுள்ளார்.


மாடல் அழகியாக, கேரியரை தொடங்கிய ரைசா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக, தமிழக அளவில் பிரபலமானார். இதையடுத்து, இவர் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக, யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த, பியார் பிரேமா காதல், படத்தில் நடித்தார்.

இந்நிலையில், தற்போது ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக புதிய படம் ஒன்றல் ரைசா நடித்து வருகிறார். இந்த சூழலில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரைசா, தனது திருமண ஆசை பற்றி கூறியுள்ளார். அதில், விஜய்ணா என்றும், தளபதி என்றும், செல்லமாக அழைக்கப்படும், அதிக ரசிகர்களை கொண்டவரான விஜய்க்கு 2வது மனைவியாக செல்ல ஆசை என்று ரைசா குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, அர்ஜூன் ரெட்டி படம் மூலமாக, பிரபலமடைந்த தெலுங்கு நடிகர் விஜய் தேவரக்கொண்டாவையும், திருமணம் செய்ய ஆசை உள்ளதாக, ரைசா தெரிவித்துள்ளார். ரைசாவின் இந்த ஆசை பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தனது ஆசையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது என்று ரைசா கூறியுள்ளார்.