சந்திரகுமாரி சீரியலில் இருந்து ராதிகாவை விரட்டியதா சன் டிவி? அவரே அளித்த பதில்!

சென்னை: 21 ஆண்டுகால சீரியல் நடிப்புக்கு, சிறு ஓய்வு விட்டுள்ளதாக, நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.


கடந்த 40 ஆண்டுகளாக, சினிமா, சீரியலில் நடித்து வருபவர் ராதிகா சரத்குமார். குறிப்பாக, டிவி சீரியலில் மட்டும் 21 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துள்ளார். தற்சமயம், சன் டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரகுமாரி சீரியலில் முன்னணி வேடத்தில் நடித்த ராதிகா, திடீரென அதில் இருந்து விலகுவதாக, அறிவித்துள்ளார். 

இதுபற்றி விகடன் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள ராதிகா, ''தொடர் உழைப்பு காரணமாக, உடல் மிக சோர்வடைந்துள்ளது. இடைவிடாமல் நடித்து வருவதால், சமீபகாலமாக, உடல் சரியாக ஒத்துழைப்பு தருவதில்லை. இதனால், எனக்கு சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. இதையடுத்தே, டிவி சீரியலில் இருந்து விலகியுள்ளேன்.

இனியும் அதில் நடிக்க மாட்டேன். புதிய சீரியலில் தேவை இருந்தால் நடிப்பேன். இதுபோக, எனக்குப் போதிய நேரம் இல்லாததால், புதிய சினிமா, சீரியல் வாய்ப்புகளை ஏற்க முடியாத நிலையில்உள்ளேன். இருந்தாலும், சீரியல் தயாரிப்புப் பணிகளை எப்போதும் போல முழுவீச்சில் செய்ய ஆசைப்படுகிறேன்,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ராதிகாவின் மற்ற சீரியல்களை போல் சந்திரகுமாரிக்கு ரசிகர்களிடையே வரவேற்பு இல்லை. இதனால் சன் டிவி அந்த சீரியலை பிரைம் டைமில் இருந்து நீக்கியது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியால் அந்த சீரியலில் இருந்து ராதிகா விலகியுள்ளார்.