கணவர் ஓகே..! ஆனால் மாமியார்? சரவணன் மீனாட்சி ரச்சிதா வெளியிட்ட தகவல்!

எத்தனை சீரியல்களில் மாமியார்களுடன் சண்டை போட்டாலும் நிஜ வாழ்க்கையில் மாமியாரை தாயாக பாவித்து வரும் தொலைக்காட்சித் தொடர் பிரபல நடிகை ரச்சிதாவை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.


தன்னுடைய கணவரை தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானவரை தேர்ந்தெடுத்ததாக கூறும் ரச்சிதா தாங்கள் இருவரும் சேர்ந்து நடிச்ச தொடரில்தான் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறுகிறார். முதலில் தன்னை விரும்புவதாக அவர்தான் தெரிவித்தார். பண்ணிட்டு, என் பதிலுக்காக அவர் காத்திருந்தபோது என்னுடைய சம்மதத்தை அன்னையர் தினத்தன்று சொன்னேன்.

ஏன் என்றால் 'அம்மான்னா எனக்கு உயிர் என்று தெரிவிக்கும் ரச்சிதா, நான் அப்படி சொன்னதை கேள்விபட்டு அவரோட அம்மா ரொம்ப சந்தோஷம் ஆகிட்டாங்க. 'என் அம்மாகூட உன்னை மகள் மாதிரிதான் நினைப்பாங்க'னு அவர் சொன்னபடியே இன்னிக்கு வரைக்கும் என்னோட மாமியார் என்னை மகளாத்தான் நினைக்கிறாங்க...'' என்று ரச்சிதா கூறுகிறார். 

படப்பிடிப்பு சென்னையில் நடக்கறதாலு நாங்க இங்கேயே இருக்கோம். மாமியார் ஶ்ரீவில்லிபுத்தூர்ல இருக்காங்க. இருந்தாலும் மாசம் ஒரு முறையாவது எங்களைப் பாக்காம அவங்களால நிம்மதியா இருக்க முடியாது.

மாதம் ஒருமுறையாவது ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவோட புறப்பட்டு சென்னை வந்துடுவாங்க. என் மாமியார் எப்படா எங்களைப் பார்க்க வருவாங்கன்னு நாங்களும் ஆவலோடு காத்திருப்போம். நிஜமாவே என்னை உள்ளங்கையில வைச்சு என்னோட மாமியார் தாங்குறாங்க'' என்று பெருமிதமாக பேசுகிறார் ரச்சிதா.

லீவு கிடைச்சா பிறந்த ஊரான பெங்களூருக்கு போறது இல்லை. புகுந்த வீடான ஶ்ரீவில்லிபுத்தூர்தான் போக விரும்பறேன்னு சொல்லி முடிக்கிறார் ரச்சிதா. மெகா சீரியல் நடிகையின் கதை 148 வார்த்தைகளில் சொல்லிவிட்டோம்.