அரசியல் அவதாரம்! விரைவில் முக்கிய கட்சியில் இணைந்து செம்பருத்தி அகிலாண்டேஸ்வரி! எந்த கட்சி தெரியுமா?

வள்ளி பட புகழ். செம்பருத்தி அகிலாண்டேஷ்வரி நடிகை பிரியா ராமன் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வள்ளி திரைப்படத்தின் மூலம் நடிகையானவர் பிரியாராமன். சூரியவம்சம் சின்னராஜா நேசம் புதுசு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான இவர், தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்தும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

நேசம் புதுசு படத்தில் தன்னுடன் நடித்த ரஞ்சித்தை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரியா ராமனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்  2014 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரியா ராமனும் ரஞ்சித்தும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

ஆனால் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் மூலம் தற்போது தமிழகத்தின் அனைத்து வீடுகளிலும் பிரியா ராமன் பரிட்சீயம். இந்த புகழை அப்படியே அரசியலுக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளார் பிரியா ராமன்.

இந்நிலையில் பிரியா ராமன் விரைவில் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே நடிகை காயத்ரி ரகுராம், நடிகர் நெப்போலியன், எஸ்வி சேகர் ஆகியோர் பாஜகவில் உள்ள நிலையில் பிரியா ராமனும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரியா ராமனின் முன்னாள் கணவரான ரஞ்சித் ஏற்கனவே பாமகவில் இணைந்து கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து வெளியேறி திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது