வயசில் சின்ன பையனுடன் கல்யானம் ஆன 4 மாதத்தில் அம்மாவாகும் நடிகை!

இங்கிலாந்து இளவரசர் குடும்ப வாரிசுக்கு காட் மதர் ஆகப்போகும் பிரியங்கா சோப்ரா.


இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகையாக இருந்த மேகன் மார்க்லேவெ காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் லண்டனில் நடைபெற்றது. இங்கிலாந்து அரச குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இத்திருமண விழாவில் பங்கேற்றனர். 

 

திருமணம் நடந்து சில மாதங்கள் கடந்த நிலையில் தற்போது மேகன் மார்க்லே கர்ப்பம் தரித்துள்ளார். கூடிய விரைவில் அரச குடும்பத்திற்கு வாரிசு பிறக்கவுள்ளது. இதன் காரணமாக அரச குடும்பம் மட்டுமல்லாமல் இங்கிலாந்து மக்களும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். 


இந்த நிலையில் இவர்களுக்குப் பிறக்கும் வாரிசுக்கு காட் பேரன்ட்ஸை தேர்வு செய்யும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் பெயரும் அடிபட்டுள்ளது. கிறிஸ்துவ மரபுப்படி ஒரு குழந்தைக்கு காட் பேரன்ட்ஸ் நியமிக்கப்படுவது வழக்கம்.

 

   இவர்கள் குழந்தையோடு வாழ்நாள் முழுவதும் இணைந்திருந்து அவர்களுக்கான ஆலோசனைகளையும் மத போதனைகளையும் வழங்கி நல்ல நிலைக்கு கொண்டு செல்ல பாடுபடுவார்கள். இப்படிப்பட்ட அந்தஸ்துக்கு பிரியங்கா சோப்ராவை நியமிக்க அரச குடும்பம் ஆலோசனை நடத்தி வருகிறது. பிரியங்கா சோப்ராவும் மேகன் மார்க்லேவும் சிறந்த நண்பர்கள்.

 

   அவரது திருமணத்திற்கு பிரியங்கா சோப்ராவும் சென்றிருந்தார். மேகன் கர்ப்பமான செய்திகேட்டு பிரியங்கா சோப்ரா தனது மகிழ்ச்சியை உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தியிருந்தார்.  மேகன் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பிரியங்கா சோப்ரா பதிவிட்டிருந்தார். இந்த நிலையில்தான் அரச வாரிசுக்கு காட் மதர் ஆகும் அந்தஸ்து பிரியங்கா சோப்ராவை தேடிச்சென்று உள்ளது. 

 

   இவர் மட்டுமல்லாமல் இன்னும் பல பிரபலங்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் பிரியங்கா சோப்ரா இப்ப தான் தன்னை விட 10 வயசு சின்ன பையன கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.


  இன்றும் மூனு மாசத்துல மார்க்கல் குழந்தை பெத்துக்க இருக்காங்க. அந்த குழந்தைக்கு பிரியங்கா காட் மதரா நியமிக்கப்பட்டா, கல்யானம் ஆன 4 மாசத்துலயே அம்மாவான பெருமை பிரியங்காவுக்கு கிடைக்கும்.