18 வயதில் சீனியர் அக்காக்களுடன் இணைந்து காலேஜ் ஹாஸ்டலில்..! பிரியா பவானி சங்கர் செய்த மங்களகரான செயல்! வைரலாகும் பேட்டி!

கல்லூரி படிக்கும்போது ஆபாச படங்கள் பார்த்ததாக ஓபனாக பேச்சும் நடிகை பிரியா பவானி சங்கர், அது மங்களகரமான காரியம்தான் எனவும் பேசியிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமா உலகிற்கு வந்தவர் பவானி சங்கர். மேயாதா மான், மான்ஸ்டர் ஆகிய வெற்றிப் படங்களில் நடித்த பிறகு அடுத்தடுத்து அவருக்கு நல்ல படங்களின் வாய்ப்புகள் வரத் தொடங்கி உள்ளது. இந்தியன் 2, எஸ்.ஜே.சூர்யாவுடன் மீண்டும் ஒரு படம், அருண் விஜய்யுடன் மாஃபியா என தொடர்ந்து கோலிவுட்டில் பிஸியாக இருக்கிறார் பிரியா பவானிசங்கர்.

இந்நிலையில் அவரது பெயரை கெடுக்க பிக்பாஸில் பங்கேற்ற கவினின் முன்னாள் காதலி பிரியா என்று சில புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டது. தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரியாவிடம் தொகுப்பாளினி ஒரு கேள்வி கேட்கிறார்.

அதில் அந்த மாதிரி படம் பார்த்திருக்கிறீர்களா என்று. அதற்கு பதில் அளித்த பிரியா கல்லூரி விடுதியில் தங்கியிருந்த போது, சீனியர்களுடன் சேர்ந்து ஆபாச படம் பார்த்ததாக ஓபனாப பேசியுள்ளார். மேலும் அந்த வயதில் எல்லோருமே அந்த மாதிரியான படங்களை பார்த்திருப்பார்கள் என்றும் அந்த மாதிரி படம் பார்ப்பது மங்களகரமான காரியம் தான் என்றும் பேசியுள்ளார் பிரியா.

இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் சிலர் பாராட்டி உள்ளனர். சிலர், நடிகை பிரியா பவானிசங்கருக்கு நல்ல பெயர் உள்ளது. சினிமாவில் வளர்ந்து வருக்கூடிய இந்த சூழலில் இப்படி பெயரை கெடுத்துக்கொள்ளும் படியாக பேட்டி கொடுப்பதை பிரியா தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.