31 வயதில் இப்படி ஒரு கேரக்டரா? நடிகை பிரியா பவானி சங்கர் எடுத்த முடிவு!

சென்னை: நடிகை பிரியா பவானி ஷங்கர் புதிய படம் ஒன்றில் விளையாட்டு வீராங்கனையாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நடிகர் விஷ்ணு விஷால், அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் எஃப்ஐஆர் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதற்கு அடுத்தப்படியாக, செல்லா அய்யாவு இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே விஷ்ணு விஷாலை வைத்து, சிலுக்குவார்பட்டி சிங்கம் எனும் படத்தை இயக்கியிருக்கிறார்.

இதன்படி, பிரியா பவானி ஷங்கர் இப்புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் அவருக்கு விளையாட்டு வீராங்கனை வேடம் தரப்பட்டுள்ளதாம். இதில் அவர் நடிப்பது உறுதியானால், விளையாட்டு வீராங்கனை வேடத்தில் நடிக்கும் முதல் படமாக இது அவருக்கு அமையும்.

இதற்கு முன், மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் பிரியா பவானி ஷங்கர் குடும்பப் பெண்ணாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 31 வயதாகும் பிரியா பவானி சங்கர், விளையாட்டு வீராங்கனையாக நடிக்க இருப்பது அவரது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் இருக்கும்.