ஒரே ரேநத்தில் இரண்டு லெஜென்ட்ஸ்..! நான் ரொம்ப லக்கி ! போட்டோ போட்டு கமலை காட்டிக்கொடுத்த நடிகை!

நடிகை பூஜா குமார் தமிழில் காதல் ரோஜாவே படத்தின் மூலமாக அறிமுகமாகி கமலின் விஸ்வரூபம் , உத்தமவில்லன் என தற்போது ஹாலிவுட் வரை உச்சம் தொட்ட கதா நாயகி.


இந்த நிலையில் அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு போட்டோ மூலமாக நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான கமலுடன் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய கமல், அவரது சொந்த நிறுவனமான ராஜ்கமல் புரொடக்‌ஷன் அலுவலகத்தில் இயக்குநர் பாலசந்தர் உருவ சிலை திறந்தார். 

அந்த நிகழ்ச்சியிலும் , அதனை தொடர்ந்து ' ஹேராம் ' சிற்ப்பு காட்சி கலந்துரையாடலிலும் கலந்து கொண்ட பூஜாகுமார் , தனது சமூக வலை தளத்தில், நான் மிக அதிர்ஷடசாலி, இந்திய திரை உலகின் இரு லெஜண்ட்ஸ் உடன் நிறைய கற்க முடியும் என கமல் மற்றும் ரஜினியுடன் எடுத்த படத்தை பகிர்ந்து உள்ளார். 

இந்த நிலையில் கமலின் குடும்ப உறுப்பினரர்களுடன் ஆன போட்டோவிலும் பூஜா குமார் போஸ் கொடுத்துள்ளது அவர் எப்போது கமலின் குடும்ப உறுப்பினர் ஆனார் ? இவ்வளவு நெருக்கம் காண்பிக்கவும், எல்லா பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்தே சுற்றுவது பல கேள்விகளை எழுப்பிசர்ச்சையில் சிக்கியுள்ளார் .