உடன் பிறந்த சகோதரன் புகைப்படத்தை வெளியிட்டு பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

‘’என் சகோதரனை 3 ஆண்டுகளாகக் காணவில்லை, போலீசில் பல முறை புகார் கொடுத்தும் பலன் இல்லை,’’ என்று, நடிகை பாயல் ராஜ்புத் வேதனையுடன் கூறியுள்ளார்.


ஆர்எக்ஸ்100 என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானவர் பாயல் ராஜ்புத். இவர், இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை உருக்கமாக வெளியிட்டுள்ளார். அதில், இளைஞர் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்த அவர் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார். 

 

அதன்படி, ‘’இந்த புகைப்படத்தில் இருப்பவர் எனது சகோதரன் துருவ் ராஜ்புத். மும்பையில் வசித்து வந்த துருவ், கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி முதல் காணவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக, அவனை இழந்து நாங்கள் வாடுகிறோம். இதுதொடர்பாக, மும்பை போலீசார் பல முறை புகார் அளித்துள்ளோம்.

 

  ஆனாலும், இதுவே துருவ் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த புகைப்படத்தை பார்க்கும் யாரேனும் தகவல் தெரிந்தால் எனக்கு கூறி, சகோதரனை கண்டுபிடிக்க, உதவுங்கள். சகோதரனை இழந்து, ஒவ்வொரு நாளும் நரக வேதனையாக உள்ளது. எங்கிருந்தாலும் நீ நலமுடன் வாழ வேண்டும் சகோதரனே, கடவுள் ஆசிர்வதிப்பாராக,’’ என்று பாயல் ராஜ்புத் குறிப்பிட்டுள்ளார். 

 

அவரது கவலையை கண்டு, இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் பலரும் ஆறுதல் தெரிவிப்பதுடன், அந்த புகைப்படத்தை பகிர்ந்தும் வருகின்றனர். இது வேதனை கலந்த வைரல் விசயமாக, இன்ஸ்டாகிராமில் பரவிவருவதும் குறிப்பிடத்தக்கது.