பின்னாடியே வர்றான்..! தப்பு தப்பா பேசுறான்..! கதறும் தனுஷ் பட நடிகை!

முகநூல் மற்றும் நேரில் பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுப்பதாக நபர் ஒருவரின் மீது நடிகை பார்வதி மேனன் கொச்சியில் புகார் அளித்துள்ளார்.


பூ, மரியான் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் பார்வதி மேனன். தற்போது மலையாள படங்களில் படு பிசியாக இருக்கிறார். இந்நிலையில், இவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக நபர் ஒருவர் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தார். 

அதில், முதலில் அந்த நபர் தனது தம்பியின் முகநூலில் மெசேஜ் செய்து தான் இயக்குனர் என அறிமுகப்படுத்திக் கொண்டு தொடர்ந்து பேசி வந்துள்ளார். பின்னர் பார்வதி மேனின் அறிமுகமும் கிடைத்துள்ளது.  

அவரின் முகநூல் பக்கத்திலும் இயக்குனர் என பேசி வந்த அந்த நபர் நாளடைவில் சொந்த விஷயங்கள் குறித்து கேட்டதாகவும் அவரது பேச்சு வார்த்தை வேறு ஒரு நோக்கத்துடன் இருந்த தாகவும் பார்வதி மேனன் குறிப்பிட்டார். 

பிறகு தனது குடும்பத்தாரையும் அவர் தொல்லை செய்து இருக்கிறார். நாளடைவில் நேரில் வந்து தொல்லை கொடுக்க தொடங்கியவர், எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து வந்து இன்னல்களை கொடுத்து வருகிறார் என அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.  

இதனால், ஆத்திரமடைந்த பார்வதிமேனன் இந்த நபர் குறித்து கொச்சியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மர்ம நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் சினிமா இயக்குனர் இல்லை என்று தெரியவந்துள்ளது. 

கொச்சி பகுதியில் வழக்கறிஞராக இருந்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.