2 மணி நேரம் லேட்! பிரபல நடிகையின் மூக்கை உடைத்த ரிசிகர்கள்! கதறி அழுத புகைப்படம் வைரல்!

ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற பெற்ற பாடல் காட்சியின் கண்ணசைவு மூலம் பிரியா பிரகாஷ் வாரியர் பிரபலமானார்.


இதே பாடல் காட்சியில் இடம் பெற்ற மற்றொரு நடிகை நூரின் ஷெரீப்பும் பிரபலமாகி இருந்தார். படத்தில் அவரது நடிப்பும், கதாபாத்திரமும் இளைஞர்கள் மனதை ஈர்த்தது. இதைத் தொடர்ந்து நூரின் ஷெரீப்புக்கும் அதிக படவாய்ப்புகள் அமைந்தது.இந்நிலையில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி எனும் இடத்தில் புதிய சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைக்க நூரின் அழைக்கப்பட்டு இருந்தார்மாலை 4 மணிக்கு வர வேண்டிய நூரின் 6 மணிக்கு வந்தார்.

இதனால் கடுப்பான ரசிகர்கள் நூரின் ஷெரீப் வந்தபோது ரகளையில் ஈடுபட்டனர். நூரின் வந்ததை பார்த்த உடன் அவரின் காரை சுற்றி வளைத்து சத்தம் போட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு ரசிகரின் கை நூரினின் மூக்கில் பலமாகபட்டது. இதனால் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.வலி தாங்க முடியாமல் மேடையிலேயே நூரின் கதறி அழுதார்.

வலியை பொறுத்துக் கொண்டு விழாவில் கலந்து கொண்டார். தாமதமாக வரவில்லை என்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூட்டம் அதிகமாககூட வேண்டும் என்பதற்காக, தன்னை அருகில் உள்ள ஓரு ஓட்டலில் 2 மணி நேரம் காத்திருக்க வைத்ததாகவும் நூரின் விளக்கம் அளித்தார்.ரசிகர்கள் தாக்கியதில் நூரினின் மூக்கில் லேசான காயம் தான் ஏற்பட்டது. ஆனால் வலி கடுமையாக இருந்ததால் அவர் கதறி அழுதுவிட்டதாக நூரினின் தாயார் கூறியுள்ளர்

நிகழ்ச்சிக்கு நூரின் வந்தபோது, சிலர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நூரின் மூக்கில் ரத்தம் கொட்டுவது அவர் கதறி அழுவது சமூக வலை தளங்களில் வைரல் ஆகிஉள்ளது.