மீனாட்சி அம்மன் கோவிலில் நிவேதா பெத்துராஜ் செய்த தவறான செயல்! போலீஸ் வலை!

ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.


இவரது அம்சமான உள்ளூர் பெண்களைப் போன்ற குடும்பப்பாங்கான அழகு அழகு தமிழ் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளது.

சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது அம்சமான புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு  சென்ற நிவேதா அங்கு பிரசாதம் உண்பது போல் புகைப்படத்தை வெளியிட்டார்.

ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் மட்டும் எப்படி செல்போனை எடுத்துச் சென்று புகைப்படத்தை வெளியிட்டார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகை என்பதால் அவருக்கு மட்டும் இப்படி ஒரு சலுகையா எனவும் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே நடிகை கோவிலுக்குள் செல்போன் கொண்டு சென்றது எப்படி என விசாரிக்க போலீசார் தேடி வருகின்றனர்.