ஓய்வு இல்லாமல் உடம்புக்கு வேலை கொடுத்த நடிகைக்கு படப்பிடிப்பு தளத்தில் நேர்ந்த விபரீதம்!

நடிகை நிகிஷா பட்டேல் தற்போது எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் நடிக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.


இந்த படத்தில் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக நிகிஷா பட்டேல் நடிக்கிறார் என்று தெரிகிறது. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார் நிகிஷா பட்டேல்.  இதனால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் நிகிஷா பட்டேல் .

அதன்பிறகு அவரது உடல் ஓய்வில்லாமல் உழைத்ததே இந்த மயக்கத்திற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது மருத்துவமனைக்கு சென்ற பின்னர் நான் நலமாக உள்ளேன் ஒரு சிறு அறுவை சிகிச்சையும் நடந்தது, தொடர்ந்து எழில் இயக்கத்தில் நடிப்பேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடு செய்துள்ளார் நிகிஷா பட்டேல்.

இவர் ஏற்கனவே என்னமோ ஏதோ என்ற கௌதம் கார்த்திக் நடித்த படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தற்போது 28 வயதாகிறது லண்டனில் பிறந்த இவர் தற்போது இந்தியாவில் வசித்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.