அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை நயன்தாரா ஏகப்பட்ட கண்டிசன்களை போட்டுள்ளார்.
விஜயுடன் நடிக்க நடிகை நயன்தாரா போட்ட ஸ்ட்ரிக் கண்டிசன்! அதிர்ச்சியில் அட்லி!
நடிகை நயன்தாரா முன்னணி நடிகையாக வளர்ந்து வந்த சமயத்தில் குருவி
படத்தில் விஜயுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், நடிகர் விஜய் திடீரென நயன்தாராவை
அந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டு த்ரிஷாவை ஹீரோயினாக்கினார். அப்போது முதலே விஜய்
மீது நடிகை நயன்தாராவுக்கு சற்று கோபம் உண்டு. இருந்தாலும் கூட முன்னணி நடிகை ஆக வேண்டும்
என்பதற்காக வில்லு படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அந்த படம் அட்டர் பிளாப்.
இதன் பிறகு விஜய்
– நயன்தாரா சேர்ந்து நடிக்கவே இல்லை. தற்போதைய சூழலில் தமிழ், தெலுங்கில் நம்பர் ஒன்
நாயகி என்றால் நயன்தாரா தான். அவரது ஸ்க்ரீன் பிரசன்சுக்கே ஒரு பயர் உண்டு. இதனால்
முன்னணி நாயகர்கள் கூட நயன்தாராவின் கால்ஷீட்டுக்கு காத்துக் கிடக்கின்றனர். விஸ்வாசம்
படத்தில் நடிக்க கூட நயன்தாராவுக்காக தனது டேட்டுகளில்அட்ஜஸ்ட் செய்தார்.
இந்த நிலையில் விஜயை
வைத்து தான் இயக்க உள்ள படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக்க அட்லி முடிவு செய்தார்.
அட்லியின் முதல் படமான ராஜா ராணியில் ஹீரோயின் நயன்தாரா. மேலும் ராஜா ராணி படம் நயன்தாராவுக்கு
ஒரு பிரேக் கொடுத்தது. எனவே தனது பேச்சை கேட்டு விஜயுடன் நயன்தாரா நடிப்பார் என்று
அட்லி கணக்குப் போட்டார். ஆனால் நடிக்கத் தயார் என்று கூறி நயன்தாரா போட்ட கன்டிசன்கள்
தான் ஹைலைட்.
முதலில் படத்தின்
கதையை தன்னிடம் முழுமையாக கூற வேண்டும், தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால்
மட்டுமே நடிப்பேன், வெறும் பாடல் காட்சிகளில் மட்டும் வந்து செல்லமாட்டேன் என்று தனது
கண்டிசன்களை அடுக்கியுள்ளார் நயன்தாரா. விஜய் படத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகள்
தயாராக உள்ள நிலையில், தேடி வந்த வாய்ப்பை இப்படி கன்டிசன் போட்டு கெடுக்கலாமா என அட்லி
கேட்டுள்ளார்.
அதற்கு தற்போது தான்
பட வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கவில்லை என்றும், வரும் வாய்ப்புகளை ஏற்க முடியாமல் தவிப்பதாகவும்,
தன்னுடைய மார்கெட் ஸ்டெடியாக உள்ள நிலையில் விஜய் படத்தில் நடித்து மார்கெட்டை இழக்க
விரும்பவில்லை. அதனால் படத்திற்கு சம்பளமாக ஆறு கோடி ரூபாய் ஒ ரே பேமென்டில் கொடுக்க
வேண்டும், கதையை முழுவதுமாக கூற வேண்டும்.
இதனை செய்தால் விஜயுடன்
நடிப்பதை பற்றி யோசிப்பதாக நயன்தாரா கூறியுள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல்
அட்லி யோசித்து வருகிறாராம்.