தர்பார் பட பூஜை! விஜய்யை தொடர்ந்து ரஜினியையும் அவமதித்த நயன்தாரா!

என்னதான் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தாலும் நயன்தாராவிற்கு இவ்வளவு திமிர் ஆகாது என்ற பேச்சு எழுந்துள்ளது.


தற்போதைய சூழலில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நம்பர்-1 நடிகை யார் என்றால் அவர் நயன்தாரா தான். ரஜினி முதல் நேற்றுவந்த சிவகார்த்திகேயன் வரை அனைத்து நடிகர்களுமே நயன்தாராவை தங்களுடன் நடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் இயக்குனர்களும் நடிகர்களுக்கு ஏற்ற வகையில் நயன்தாராவை அவர்களுக்கு ஜோடியாக்கி வருகின்றனர்.

விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் கூட நயன்தாராதான் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. ஆனால் படத்தின் நாயகியான நயன்தாரா அந்த பூஜையில் பங்கேற்க வில்லை. இதேபோல நடிகர் ரஜினியின் தர்பார் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மும்பையில் தொடங்கியது.

இந்த பூஜைகளும் கூட தர்பார் படத்தின் கதாநாயகியான நயன்தாரா பங்கேற்கவில்லை. பொதுவாக ரஜினி திரைப்படம் என்றால் அந்த படத்தின் பூஜையில் கதாநாயகி தவறாமல் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் நயன்தாரா இப்படி கலந்து கொள்ளாமல் இருந்தது ரஜினியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது ஆகவும் வருத்தமடைய வைத்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

என்னதான் பிஸியாக இருந்தாலும் தயாரிப்பாளரிடம் ஒரு வார்த்தை கூறினால் வந்து செல்வதற்கு விமான கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று திரையுலகினர் நயன்தாராவிடம் கேட்க ஆரம்பித்துள்ளனர். நம்பர் 1 நடிகையான நயன்தாரா தனது வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் பணிவையும் காட்ட வேண்டும்.