பிரபல நடிகை நயன்தாரா கர்ப்பம்! பிறந்த நாளன்று வெளியான அதிர்ச்சி தகவல்!

பிரபல நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை ரகசியதிருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் வெளியான தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நயன்தாரா. அதற்கு அடுத்த படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவுக்கு கிடைத்தது. பின்னர் விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகி தனுஷ், சிம்பு எனும் இளம் ஹீரோக்களுடனுடன் இணைந்து நடித்தார்.
   தற்போதைய சூழலில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் உச்சத்தில் இருக்கும் நடிகை யார் என்று கேட்டால் நயன்தாரா என்று சொல்லிவிடலாம். இதற்கிடையே மாயா, அறம் போன்ற படங்கள் மூலம் கதையின் நாயகியாகவும் நயன்தாரா அசத்தி வருகிறார். தற்போது கூட அய்ரா என்ற படத்தில் கதையின் நாயகியாக இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

  அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார். கொலையுதிர் காலம் என்கிற படம் விரைவில் வெளியாக உள்ளது. மலையாளத்தில் இரண்டு படம், தமிழில் இரண்டு படம், தெலுங்கில் ஒரு படம் என பிசியாக இருந்து வரும் நயன்தாரா தனது34வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்தியன் 2 படத்தில் இருந்து நயன்தாரா விலகிக் கொண்டார். இதற்கான காரணம் வெளியாகாத நிலையில் தான் சில திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.   அதாவது இந்தியன் 2 திரைப்படத்தில் குதிரை ஏற்றம், சண்டை காட்சி என ரிஸ்க் காட்சிகள் நயன்தாராவுக்கு நிறைய இருக்கின்றன. இது தெரிந்து தான் நயன்தாரா அந்த படத்தில் ஒப்பந்தம் ஆனார். ஆனால் திடீரென இயக்குனர் ஷங்கரை சந்தித்த நயன்தாரா தற்போதைய சூழலில் இந்தியன் 2ல் நடிக்க முடியாத சூழல் குறித்து விளக்கியுள்ளார். நிலைமையை புரிந்து கொண்ட ஷங்கரும் நயன்தாராவுக்கு குட் பாய் சொல்லிவிட்டு காஜல் அகர்வாலை கமலுக்கு ஜோடியாக்கியுள்ளார்.   நயன்தாரா தான் கர்ப்பமாக இருப்பதால் தான் ரிஸ்க் காட்சிகள் நடிக்க முடியாது என்று கூறி இந்தியன் 2ல் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த தகவல் நயன்தாராவின் பெற்றோருக்கு தெரிந்து பிரச்சனை ஆனதும் விக்னேஷ் சிவனை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. உண்மையில் இது வதந்தியா? இல்லையா? என்பதை விக்னேஷ் சிவன் தான் ட்விட்டர் பதிவில் தெரிவிக்க வேண்டும்.