உடற்பயிற்சியில் உடல்வாகை மாற்றிய கவர்ச்சி நடிகை! போட்டோக்களை ஜொல்லு விட்டு பார்க்கும் ரசிகர்கள்

கொஞ்சம் குண்டாகவே இதுநாள் ரசிகர்களுக்கு தெரிந்து வந்த கனவுக் கன்னி நமீதா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து போயுள்ளனர்.


2002ம் ஆண்டு சொந்தம், ஜெமினி என்ற படத்தில் அறிமுகமான நமீதா 2004ல் ஒக ராஜூ ஒக ராணி, ஒக ராதா  இதரு கிருஷ்ணலு பெல்லி உள்ளிட்ட தெலுங்கு படத்தில் நடித்து ஆந்திர ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

பின்னர் 2004ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படம் மூலம் அறிமுகம் ஆன நமீதா, ஏய், இங்கிலிஷ்காரன், தொடர்ந்து பல்வேறு தமிழ்,தெலுங்கு படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து ரசிகர்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

நமீதா மச்சான் மச்சான் என்று அழைக்கும் ஸ்டைலும் அவரது உடையும்தான் தமிழ்த் திரைப்பட ரசிர்களை அதிகம் கவர்ந்திழுக்கக் காரணம். பொதுவாக மற்ற கவர்ச்சி நடிகைகளை போல நமீதாவுக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தன்னுடைய உடல் கட்டமைப்பை மாற்ற முடிவெடுத்த நமீதா கடுமையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்தார்.

தற்போது நமீதா மிகவும் ஒல்லியாகி கட்டுக்கோப்பாக மாறியுள்ள மிகவும் இளமைத் தோற்றத்தில் உள்ள போட்டோக்கள் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் நீண்ட நாட்களாக நமீதாவை பார்க்காமல் ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது புத்துணர்ச்சி கிடைத்துள்ளது.

இந்தப் புகைப்படங்களை பார்த்த பின்னாவது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்ற நடிகைகளுக்கு கொடுக்கும் வாய்ப்பை போல நமீதாவுக்கு கொடுக்க வேண்டும் என்றும் அவரது படங்கள் பாக்ஸ் ஆபிசில் ஹிட் ஆக வைப்பது தங்கள் பொறுப்பு என்றும் ரசிகர்கள் தெரிவித்தனர்.