என் மகனுக்கு ஒரு தம்பி வரப்போறான்..! மகிழ்ச்சியான செய்தி கூறிய மோனிகா! ஆனால் அதிர்சசியில் உறைந்த கணவன்! காரணம் இது தான்!

சென்னை: நடிகை, டிவி தொகுப்பாளினி மோனிகா, லைக், கமெண்ட் வாங்குவதற்காக சமீபத்தில் வெளியிட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது.


சன் டிவியில் வானிலை செய்திகளை தொகுத்து வழங்கியதன் மூலமாக பிரபலமானவர் மோனிகா. பின்னர்,  முழு நேர நடிகையாக மாறிய இவருக்கு திருமணமாகி, ஜெடன் என்ற பெயரில் ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில், செ ப்டம்பர் 10ம் தேதி பக்கத்தில், ''எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஜேடனுக்குத் தம்பி வரப்போறான்,'' எனக் கூறி, மோனிகா ஒரு பதிவை வெளியிட்டார்.

இதனைப் பார்த்த பலரும் வாழ்த்து மழை பொழிய, சில மணிநேரங்கள் சஸ்பென்ஸ் வைத்த மோனிகா, பின்னர், ஜேடனின் புதிய தம்பி என்று கூறி ஒரு நாய்க்குட்டியின் புகைப்படத்தை வெளியிட்டார். அவருக்கு உற்சாக வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் அனைவரும் அப்படியே ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர்.  

இப்படி பலரையும் ஒருசேர கடுப்படித்த மோனிகா, இதுபற்றி தற்போது வார இதழ் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். அதில், ''வீட்டு நாய் வளர்க்க வேண்டும் என நீண்ட நாளாக ஆசைப்பட்டோம். அதனை நிறைவேற்றும் வகையில், எனக்கும், என் மகனுக்கும் சேர்த்து, எனது கணவர் புதிய நாய் ஒன்றை வாங்கி, பரிசாகக் கொடுத்துள்ளார்.

அதனை வித்தியாசமாகக் கொண்டாட முடிவு செய்து, பேஸ்புக்கில் பதிவு வெளியிட்டேன். எனது கணவர் உள்பட நண்பர்கள் பலரும் அந்த பதிவை பார்த்ததும் நான் கர்ப்பமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு ஆளாளுக்கு அட்வைஸ் செய்ய தொடங்கிவிட்டார்கள். வேறு வழியின்றி, பிறகு உண்மையை போட்டுடைக்க நேரிட்டது,'' என்று குறிப்பிட்டுள்ளார்.