ரூ.3000 முதல் ரூ.50 ஆயிரம் வரை! மீரா மிதுனின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றி நிரூபா மெட்டில்டா!

மாடல் அழகி மீரா மிதுன் மீது அடுத்தடுத்து புகார்கள் எழுவதால் அவருக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.


சென்னையை சேர்ந்தவர் மாடல் அழகி தமிழ்ச்செல்வி என்கிற மீரா மிதுன். மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு என ஆறு அழகி பட்டங்களை அவர் பெற்றிருந்தார். தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து இருந்தார். இவர் மிஸ் தமிழ்நாடு டைவா என்ற பெயரில் அழகிப் போட்டி நடத்த திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் அஜித் ரவி மற்றும் ஜோ மைக்கேல் ஆகிய இருவர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்தார்.

தன்னை அழகிப் போட்டி நடத்த விடாமல் இருவரும் தடுப்பதாகவும் அவர்கள் பல அழகிப் போட்டிகளை நடத்தியதால் தொழில் போட்டி காரணமாக தன்னை மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து மீரா மிதுனுக்கு வழங்கப்பட்டிருந்த மிஸ் சவுத் இந்தியா பட்டம் அளிக்கப்பட்டது. அவர் வயதை மறைத்து மோசடி செய்து பட்டம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் மாடல் அழகி நிருபா என்பவரும் ஜோ மைக்கேலும் மீரா மிதுன் மீது புதிய புகார் ஒன்றை அளித்துள்ளனர். அழகிப் போட்டிகளில் பங்கேற்பதற்கு பணம் வாங்கிவிட்டு மீரா மிதுன் ஏமாற்றி விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் ஏற்கனவே தமிழ்நாட்டில் அழகிப்போட்டியில் நடத்திவரும் மிஸ் தமிழ்நாடு என்ற அமைப்பின் லோகோவை திருடி தனது அமைப்பு என மீரா மிதுன் மோசடியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே நிரூபா கூறியதாவது என்னைப் போன்று பல பெண்களில் ரூ.3000 முதல் ரூ.50 ஆயிரம் வரை மீரா வசூலித்துள்ளார்.

அழகிப்போட்டிக்கான -நுழைவுக் கட்டணம் என்று கூறி மீரா வசூலித்தார். ஆனால் தற்போது வரை அழகிப்போட்டியை நடத்தவில்லை. இதனால் மனதளவில் நான் பாதிக்கப்பட்டுள்ளதாக நிரூபா தெரிவித்துள்ளார்.