அப்படி இருந்த மீரா ஜாஸ்மீனா இது? உடற்கட்டை செதுக்கி ரசிகர்களை ஜொல் விட வைக்கும் ஜாஸ்மீன் போட்டோ உள்ளே!

நடிகை மீரா ஜாஸ்மின் தெரியாத தமிழ் ரசிகர்கள் இல்லை எனலாம் . கடந்த 2002ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளிவந்த லிங்குசாமி இயக்கிய ரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர்.


அதன் பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஆயுத எழுத்து, மெர்குரிப்பூக்கள் என சில படங்களில் மட்டுமே நடித்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் இவர்.

தற்போது இவருக்கு 37 வயதாகிறது. கேரளாவை சேர்ந்த இவர் 2011 ஆம் ஆண்டு உடன் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவரது உண்மையான பெயர் ஜாஸ்மின் மேரி ஜோசப் என்பதாகும். கடந்த 2014ஆம் ஆண்டு துபாயைச் சேர்ந்த அனில் ஜான் என்னும் ஒரு இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார் .

திருமணத்திற்கு பின்னர் துபாயிலேயே வசித்து குழந்தை குட்டி என தனது குடும்பத்தை கவனிக்க சென்று, அவரது உடல் நன்றாக பெருத்து உண்டாகியது. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நகைக்கடைக்கு அவர் வந்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் நமது மீராஜாஸ்மினா இது என்னும் அளவிற்கு ஆடிப்போயுள்ளனர்.

 உடனடியாக ஒரு சில புகைப்படங்களையும் எடுத்து சமீபத்தில் அதனை இன்டர்நெட்டில் வைரலாக பரவ விட்டனர். 

இந்நிலையில் இந்த சில மாதங்களில் தனது உடலை மீண்டும் எடை குறைத்துள்ளார் மீரா ஜாஸ்மின். எடையை குறைத்துவிட்டு தனது கணவருடன் செல்பியையும் எடுத்து பதிவு செய்துள்ளார். இதனால் மீண்டும் மீரா ஜாஸ்மின் தமிழ் சினிமாவிற்கு வந்து ஒரு ரவுண்டு அடிக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.