சென்சார் இல்லை என்பதற்காக இப்படியா? ரசிகர்களுக்கு மீனா கொடுத்த இன்ப அதிர்ச்சி!

திரைப்படங்களில் வாய்ப்பு இல்லாத நிலையில், விளம்பர படங்களில் நடிகை மீனா தலைகாட்டி வந்தார். ஆனால் விளம்பர படங்களிலும் மீனாவிற்கும் பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை.


டிவி சீரியல் பக்கம் சென்றவருக்கும் ஏமாற்றம். இந்த நிலையில் வெப் சீரிஸ்களில் தனது திறமையை காட்ட மீனா முடிவு செய்தார். இதனை தொடர்ந்து Zee5 நிறுவனத்திற்காக மீனா நடித்துள்ள வெப் சீரிசின் டிரெய்லர் அண்மையில் வெளியானது.

முழுக்க முழுக்க ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மீனா, இறுதியில் சில கெட்ட வார்த்தைகள் பேசுகிறார். சென்சார் இல்லை என்பதற்காக இப்படி மீனாவை கெட்ட வார்த்தை எல்லாம் பேசலாமா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.