திருமணமாகி விவாகரத்தான நடிகைக்கு சீண்டல்! பிரபல டைரக்டருக்கு நேர்ந்த பரிதாபம்!

தன்னுடைய பெயருக்கு களங்கம் கற்பித்ததாக நடிகை மஞ்சு வாரியர் அளித்த புகாரில் மலையாள திரையுலகின் இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் கைது செய்யப்பட்டுள்ளார்.


சமூக வலைதளங்களில் தன்னுடைய பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் தொடர்ந்து பதிவிட்டு வருவதாக நடிகை மஞ்சுவாரிய குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை கோரி திருவனந்தபுரம் போலீசிலும் புகார் அளித்திருந்தார்.

மேலும் ஸ்ரீகுமார் மேனனால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் மஞ்சு வாரியார் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார். ஸ்ரீகுமார் மேனனுக்கு எதிரான டிஜிட்டல் ஆதாரங்களையும் மஞ்சு வாரியார் சமர்ப்பித்திருந்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த திருவனந்தபுரம் போலீசார் தீவிர விசாரணைக்குப்பின்னர் நேற்றிரவு இயக்குநர் ஸ்ரீகுமார் மேனனை கைது செய்தனர்.

பின்னர் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்ரீகுமார் மேனன், நேரம் வரும் போது மனம் திறந்து பேசுவதாக தெரிவித்து விட்டு சென்றார். 

மோகன்லால், மஞ்சவாரிய நடித்த ஓடியன் படத்தை இயக்கியவர் ஸ்ரீகுமார் மேனன். பல்வேறு விளம்பரப் படங்களையும் இயக்கிய அவர், முகநூலில் மஞ்சுவாரியார் வெற்றிக்கு தாம் காரணமாக இருந்ததாக சில பதிவுகளை போட்டதால் நடிகையின் கோபத்துக்கு ஆளானதாக கூறப்படுகிறது.