47 வயசானாலும் கட்டு குலையாத பேரழகு! பிரபல நடிகை வெளியிட்ட செம ஹாட் புகைப்படம்! யார் தெரியுமா?

இந்தி நடிகை மந்திரா பேடி நீச்சலுடையில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளன.


தமிழில் நடிகர் சிம்புவுடன் மன்மதன் என்ற படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு தோன்றியவர் மந்திரா பேடி. இதன் பிறகு இந்தி திரையுலகில் பிஸியான அவர் தற்போது படவாய்ப்புகள் இன்றி டிவி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். ராஜ் கவுசல் என்பவரை திருமணம் செய்து கொண்ட மந்திரா பேடி தற்போது 24, சிஐடி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.

கிரிக்கெட் தொடர் களின்போது விமர்சகராகவும் இருந்து வருகிறார். தற்போது மாலத்தீவில் பொழுதை கழிக்க சென்றுள்ள மந்திரா பேடி பிகினி உடையில் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.

பல்வேறு போஸ்களில் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ள மந்திரா பேடி மிகவும் மகிழ்ச்சியான இடம் என்று மாலத்தீவை புகழ்ந்துள்ளார். சூரிய வெளிச்சம் நீலநிற கடல் என்று மாலத்தீவின் அழகை வர்ணித்து அவர் கவிதை பாடினாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது என்னவோ அந்த நடிகையின் உடற்கட்டு தான்.

மந்த்ரா பேடியா இது என்று பலரும் மூக்கில் விரல் வைத்தபடி கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர். 

40 வயதான மந்திரா பேடிக்கு வீர் என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.