நடிகை மாளவிகாவை தெரியாத தமிழ் சினிமா ரசிகர்கள் இல்லை. கடந்த 1999 முதல் சினிமாவில் நடித்து வரும் இவர் பெங்களூரைச் சேர்ந்தவர்.
அந்த மாதிரி கதைனா ஓகே! திருமணமாகி செட்டில் ஆன நடிகை மாளவிகா இயக்குனர்களுக்கு கண்டிசன்!

இவருக்கு தற்போது 39 வயதாகிறது. தமிழ், தெலுங்கு ,கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் உன்னை தேடி, ஆனந்த பூங்காற்றே ,ரோஜாவனம், வெற்றிக்கொடிகட்டு, சந்திரமுகி என பல படங்களில் நடித்து பிரபலமானவர். மேலும் ‘வாளமீனுக்கும் விலங்குமீனுக்கும் கல்யாணம்’ என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.
2007 வரை படங்களில் நடித்து வந்த இவர் அதன் பின்னர் சுரேஷ் மேனன் என்பவருடன் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவருக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவர்கள் இருவரும் வளரும் வரை காத்திருந்த மாளவிகா தற்போது சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
இதற்காக கதைகளை கேட்டு வரும் இவர் தனக்கு பொருத்தமான திருட்டுப்பயலே மாதிரி கதையுடன் வருமாறு இயக்குனர்களிடம் கூறி வருகிறார். வெகு சீக்கிரத்தில் படங்களில் நடிக்கவும் தயாராகி உள்ளார். எப்படியோ மாளவிகாவின் ரசிகர்களுக்கு குஷி தான்.