கணவன் கடந்த வருடம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது மறு திருமணம் செய்து கொள்ள உள்ளார் நடிகை மைனா நந்தினி.
நானும் பெண் தானே! எனக்கும் உணர்ச்சிகள் வராதா? கணவனை இழந்த நடிகை ஏக்கம்!

சரவணன் மீனாட்சி தொடரில் மைனா எனும் கேரக்டரில் நடித்து அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டவர் நந்தினி. இவரை நந்தினி என்று சொல்வதைவிட மைனா என்று கூறினால் தான் அனைவருக்கும் தெரியும். கடந்த ஆண்டு திடீரென மைனாவின் கணவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.
கணவரின் தற்கொலைக்கு மைனா தான் காரணம் என்று பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் தனது கணவரை பிரிந்து தான் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக வசித்து வருவதாகவும் அவரை சந்தித்தே பல மாதங்கள் ஆகிவிட்டதாகவும் மைனா கூறியிருந்தார். இது தொடர்பான விசாரணைகள் முடிந்து கணவன் தற்கொலையில் மைனாவிற்கு எந்த தொடர்பும் இல்லை என்று போலீசார் முடிவுக்கு வந்தனர்.
இந்த நிலையில் மைனா தனது காதலர் என்று கூறி ஒரு இளைஞரின் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்தப் பக்கத்தில் ஓராண்டுக்கும் மேலாக நெருக்கமாக இருந்து வருவதாகவும் அடுத்த ஆண்டு மேலும் நெருக்கமாக வேண்டும் என்கிற ரீதியில் மைனா ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
அதாவது கணவன் உயிருடன் இருக்கும் போதே அந்த நபருடன் நெருக்கமாக இருந்ததை ஒப்புக் கொண்டிருந்தார் மைனா. இதனால் மைனா கள்ளக்காதலில் இருந்ததாகவும் அதனால் தான் அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் பேச்சுகள் எழுந்தன. இதுகுறித்து மைனாவிடம் கேட்டபோது நானும் ஒரு பெண் எனக்கு உணர்ச்சிகள் இருக்காதா என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்டதாகவும் ஆனால் திருமணவாழ்க்கை எதிர்பார்த்தபடி இல்லை என்றும் மைனா தெரிவித்துள்ளார். தற்போது தான் காதலிக்கும் நபர் தனது நீண்டகால நண்பர் என்றும் அவர் தான் எத்தனை நாளைக்குத்தான் பழையதை நினைத்து கொண்டிருப்பாய் என்று கூறி தன்னை ஆறுதல்படுத்தி திருமணத்திற்கு தயார் படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.