ரோஜா புகழ் மதுபாலா நினைவில் இருக்கிறாரா? அவருடைய மகள்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? புகைப்படம் உள்ளே!

சென்னை: நடிகை மதுபாலாவின் மகள்கள் புகைப்படம் தற்போது வெளியாகி, டிரெண்டிங் ஆகியுள்ளது.


அழகன், ரோஜா, ஜென்டில்மேன் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் மதுபாலா. முன்னணி நடிகையாக இருந்தபோதே, திடீரென 1999ம் ஆண்டு நடிகை ஹேமமாலினியின் உறவினர் ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் நடிப்பதில் இருந்து மதுபாலா விலகினார். இந்நிலையில்,  தற்போது மதுபாலா, அவரது மகள்களுடன் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.  


அவருக்கு அமெயா, கையா என 2 மகள்கள் உள்ளனர். இருவரும் பருவ வயதில் உள்ள நிலையில், மதுபாலாவிற்கு இவ்வளவு பெரிய மகள்கள் உள்ள விசயம் இப்போதுதான் தெரிகிறது என்று சமூக வலைதளத்தில்  பலரும் கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர். மதுபாலாவிற்கு இப்படி மகள்கள் உள்ளனர் என்று யோசித்தே பார்க்க முடியவில்லை, இன்னமும் அவர் சிறு பெண் போலத்தான் உள்ளார், என்றும் சில ரசிகர்கள் கமெண்ட் பகிர்வதையும் காண முடிகிறது.