இந்தியை எதிர்ப்பவர்களின் குழந்தைகள் தமிழ் மட்டும் தான் பேசுகிறார்களா? கேட்டாங்க பாருங்க ஒரு கேள்வி!

இந்தி மொழி கற்றுக் கொள்வதால் தாய் மொழி மீதுள்ள பற்று என்றும் குறையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் நடிகையும், இயக்குருமான லட்சுமி ராமகிருஷ்ணன்.


ஆரோஹனம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களின் இயக்குநரான லட்சுமி ராமகிருஷ்ணன் பல படங்களில் நடித்துள்ளார். பெண்ணிய சிந்தனையாளர் என்ற மற்றொரு முகமும் இவருக்கு உண்டு. 

இந்தி தினத்தை முன்னிட்டு, உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் உலகளவில் இந்தியாவின் அடையாளமாக மாற இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது பலராலும் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று தெரிவித்தார். அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த கருத்தை வாபஸ் பெற்றார் அமித்ஷா.

இந்நிலையில் இதுகுறித்து நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இந்தியா முழுவதும் பொதுமக்கள் பயணிக்க இந்தி கற்பதில் தவறு இல்லை. இந்தி மொழியால் தாய் மொழியின் மீதான பற்று விலகிவிடாது. தாய் மொழியை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துக்கு முற்றிலும் மாறாக இயங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

பிள்ளைகளுக்குத் தேவை சிறந்த கல்வி, முழுமையான பாடத்திட்டம், நம்பிக்கை போன்றவை தான். இவை தெரிந்துவிட்டால் அவர்களுக்கு நல்லது கெட்டது தெரிந்துவிடும். பெற்றோர்களாகிய நாம், அவர்களுக்குக் கலாச்சாரம் மாற்று பாரம்பரியத்தைக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.