தனது ரேட்டை உயர்த்த லட்சுமி ராமகிருஷ்ணன் போடும் பலே பிளான்! மசியமா ஜீ தமிழ்?

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பலே பிளானுடன் களம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தமிழ் திரையுலகில் பல முகங்கள் உள்ளது. இயக்குனர், தயாரிப்பாளர், நடிகை, சமூக ஆர்வலர் என பல முகங்களில் அவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் இவரே. கடந்த பல வருடங்களாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி 2015 ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை வேறு ஒரு சேனலுடன் சேர்ந்து இவர் நடத்தப் போவதாக செய்திகள் வந்தது. இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கேட்டபோது அவர் கூறியதாவது…

தற்போது ஒரு வதந்தி பரவிக்கொண்டிருக்கிறது. ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை வேறு ஒரு சேனலுடன் இணைந்து நான் நடத்தப்போவதாக அந்த வதந்தி வந்து சேர்ந்து கொண்டு இருக்கிறது. நான் வேறு எந்த சேனலுக்கும் அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியை நடத்தப் போவதில்லை. அந்த நிகழ்ச்சியில் என்னுடைய சிறந்த பங்களிப்பை கொடுத்தேன்.

தற்போது அது முடிந்து விட்டது. ஜீ தமிழ் சேனல் என்னை மீண்டும் அந்த நிகழ்ச்சியை நடத்த அணுகினார்கள். வேறு சில சேனல்களும் வந்தது. ஆனால் இனிமேல் அந்த நிகழ்ச்சியை நடத்தப் போவதில்லை. என்று கண்டிப்பாகக் கூறியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். லட்சுமி ராமகிருஷ்ணன் இப்படி கூறுவதே நிகழ்ச்சிக்கான தனது ரேட்டை உயர்த்த போடும் திட்டம் தான் என்கிறார்கள்.