தந்தை மரணத்தை கொண்டாடி மகிழும் லட்சுமி ராமகிருஷ்ணன்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தனது தந்தை காலமாகிவிட்டதாகவும் ஆனால் தான் துக்கமாக இல்லை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


தமிழ் சினிமாவில் மிக முக்கியமான கேரக்டர் ஆர்டிஸ்டாக இருப்பவர் லட்சுமி ராமகிருஷ்ணன். தனித்தன்மை வாய்ந்த திரைப்படங்களையும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி வருகிறார். சொல்வதெல்லாம் உண்மை எனும் நிகழ்ச்சியின் மூலம் லட்சுமி ராமகிருஷ்ணன் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம். மேலும் பெண்ணுரிமை சார்ந்த கருத்துகளால் சமூக வலைதளங்களிலும் இவர் பாப்புலராக உள்ளார்.

   தனது வாழ்வின் அத்தனை முக்கியமான அம்சங்களையும் லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் அண்மையில் வெளியிட்ட பதிவு ட்விட்டரில் அவரை பின்தொடர்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. பின்னர் முழுமையாக ட்விட்டர் பதிவை மீண்டும் மீண்டும் படித்து பார்த்த பிறகு தான் லட்சுமி ராமகிருஷ்ணன் என்ன சொல்லியிருக்கிறார் என்பது முழுமையாக தெரியவந்தது.

   நேற்று (09-11-2018) தனது ட்விட்டர் பக்கத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், தனது தந்தை தனது அம்மா, அக்கா மற்றும் அம்மாவுடன் மீண்டும் சேர்வதற்காக சொற்கத்திற்கு சென்றுவிட்டதாக லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். தனது தந்தைக்கு 97 வயது ஆனாலும் அவர் மிகவும் இளமையானவர் மற்றும் மிகவும் சிறப்பான மனிதர் என்று லட்சுமி தெரிவித்துள்ளார். அவர் மரணம் அடைந்துவிட்டாலும் நாங்கள் துக்கமாக இல்லை என்று லட்சுமி கூறியுள்ளார்.

   மாறாக தனது தந்தை மரணத்தை அவர் வாழ்ந்த வாழ்வை நினைத்து தாங்கள் கொண்டாடுவதாக லட்சுமி தெரிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்த பலரும் என்னது தந்தை மரணத்தை கொண்டாடுகிறாரா? என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். பின்னர் வேறு சிலர் லட்சுமி ராமகிருஷ்ணன் என்ன அர்த்தத்தில் அதனை கூறியுள்ளார் என்று விளக்கம் அளித்தனர். இதன் பின்னரே லட்சுமி ராமகிருஷ்ணன் தனது தந்தை சிறப்பான வாழ்வை வாழ்ந்து முடிந்துவிட்டு சென்றதால் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியதை எண்ணி அமைதி அடைந்தனர்.