மார்க்கெட் அவுட்! தொழில் அதிபர்ளுக்கு வலை விரிக்கும் லட்சுமி மேனன்!

சினிமாவில் கும்கி படம் மூலம் அறிமுகமான நடிகை லஷ்மி மேனன் விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது...


இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில்,கடந்த  2012 ஆம் ஆண்டு வெளியான 'கும்கி' படத்தின் மூலம் தன்னுடைய  பத்தாம் வகுப்பிலேயே (15 வயது)கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, 'சுந்தர பாண்டியன்' படமும் வெற்றியை அடுத்து,பல பட வாய்ப்புகள் கிடைத்தது.

அந்த வகையில், குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், கொம்பன், மஞ்சப்பை, ரெக்கை, என பல படங்களில் நடித்தார். ஆனால், புதிய நடிகைகளின் வரவால் லட்சுமி மேனன் மார்க்கெட் டல் அடித்தது. இதனால், லட்சுமி மேனனும் படிப்பில் கவனம் செலுத்தி வந்ததுள்ளார்

இதற்கிடையில்,  ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, சாகசம் போன்ற படங்களில் பாடல்களும் பாடியுள்ளார். தற்போது இவருடைய கைவசம், பிரபுதேவாவுடன் நடித்து வரும் 'யங் மங் சங்' என்கிற படம் மட்டுமே உள்ளது. இந்த படத்திற்காக தன்னுடைய உடல் எடையை குறைத்து நடித்திருந்தார் லட்சுமி மேனன்.

இந்நிலையில் இவருக்கு திருமணம் செய்து வைக்க, இவருடைய  பெற்றோர் தீவிரமாக மாப்பிளை பார்த்து வருவதாக, செய்தி வெளியாகியுள்ளது. அதுவும் தொழில் அதிபர் மாப்பிள்ளைகளுக்கு தான் முக்கியத்துவமாம். இந்த தகவல் லஷ்மி மேனன் ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது