அஜித், சூர்யா, விக்ரம எல்லாம் முடிச்சிட்டேன்! ஆனா விஜய் தப்பிச்சிட்டார்! லைலாவின் ஏக்கம்!

ஒரு காலத்தில் தமிழில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் லைலா. இவருக்கு தற்போது 38 வயதாகிறது .


தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார் லைலா. தமிழில் முதல்வன், ரோஜாவனம் ,பார்த்தேன் ரசித்தேன், அள்ளித்தந்த வானம், உன்னை நினைத்து என பல படங்களில் நடித்து ஹிட் அடித்தவர் இவர். கடந்த 2006ம் ஆண்டு ஈரானைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குதர்க்கமான ஒரு பதிவு செய்துள்ளார் நடிகை லைலா.  என்னிடம் இருந்து தப்பிய ஒரே ஒரு நடிகர் விஜய் மட்டுமே என்றும் பதிவு செய்துள்ளார். அதாவது உன்னை நினைத்து என்ற படத்தில் லைலா நடித்திருப்பார். இந்த படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்தது.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சூர்யா நடித்து இருப்பார். ஆனால் உன்னை நினைத்து படத்தில் முதலில் சூர்யாவிற்கு பதிலாக நடிக்க தேர்வானது நடிகர் விஜய் ஆவார் . இதன் காரணமாக நடிகர் விஜய் என்னிடம் இருந்து தப்பி விட்டார் என்று பதிவு செய்துள்ளார் லைலா.