ஆம் என் பெயர் நஹத் கான்! நான் ஒரு முஸ்லீம் தான்! போட்டு உடைத்த குஷ்பு!

சென்னை: ''நான் முஸ்லீம்தான், எனது நாடு இந்தியா. இதில் உங்களுக்கு என்ன சந்தேகம்,'' என்று குஷ்பு அதிரடியான கருத்தை வெளியிட்டுள்ளார்.


நடிகை குஷ்பு தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். மும்பையை  பூர்வீகமாகக் கொண்ட குஷ்புவின் இயற்பெயர் நகத் கான். தமிழ் சினிமாவில் நடிக்க வந்ததை தொடர்ந்து, படிப்படியாக, தமிழ்ப்பெண்ணாகவே மாறிவிட்ட குஷ்பு, இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்துகொண்டதும் பலர் அறிந்த கதைதான்.  

இந்நிலையில், குஷ்புவை சீண்டும் வகையில், ட்விட்டரில் சிலர் கருத்து பகிர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு பதிலடி தரும் வகையில், தற்போது குஷ்பு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதற்காக தனது பெயரை Khushbu Sundar or Nakhat Khan for Sanghi fools என ட்விட்டரில் மாற்றிக் கொண்டிருக்கிறார்.  

அந்த பதிவில், ''துரதிர்ஷ்டவசமாக எனது பெயரை நான் மாற்றிக் கொள்ள நேர்ந்தது. சில சங்கி ஊமை குசும்பன்கள் (முட்டாள்கள்) என்னை பற்றி அடிப்படை உண்மை தெரியாமல் பேசுகிறார்கள். அவர்கள் என்னை முஸ்லீம் எனக் கூறி, என் நாடான இந்தியாவை விட்டு வெளியேற சொல்கின்றனர். அவர்களுக்க ஒன்றை தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். ஆமாம், நான் ஒரு கான். நான் ஒரு முஸ்லீம்.

இந்தியா என் நாடுதான்..இதில் உங்களுக்கு என்ன சந்தேகம்?,'' என குஷ்பு விளாசி தள்ளியுள்ளார். இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது.