எம்பி தேர்தலில் பிரபல நடிகை ஒருவரை பொள்ளாச்சியில் களம் இறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. (மேலும் படிக்க மேலே உள்ள தலைப்பை கிளிக் பண்ணுங்க)
எம்பி தேர்தல்! கவர்ச்சி கட்டழகியை பொள்ளாச்சியில் களம் இறக்கும் ராகுல் காந்தி!

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கொங்கு மண்டலத்தில்
இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன. சேலம் தொகுதி காங்கிரசுக்கு கன்பார்ம் ஆகியுள்ளது.
இதே போல் ஈரோடு தொகுதியைகாங்கிரஸ் கேட்டு அடம்பிடித்து வருகிறது.
ஆனால் ஈரோடு மதிமுகவுக்கு ஒதுக்கப்பட உள்ளது. அங்கு மதிமுக சார்பில் கணேச மூர்த்தி
மீண்டும் போட்டியிடுகிறார்.
இதனால் கொங்கு மண்டலத்தில் கோவை தொகுதியை காங்கிரஸ் கோருகிறது.
ஆனால் கோவையில் பொங்கலூர் பழனிசாமியின் மகனுக்கு சீட் வழங்க திமுக முடிவு செய்துள்ளது.
இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள மற்றொரு தொகுதியான பொள்ளாச்சி
காங்கிரசுக்கு ஒதுக்கப்பட உள்ளது. அந்த தொகுதியில் நடிகை குஷ்பு காங்கிரஸ் சார்பில்
போட்டியிட உள்ளார்.
தென் சென்னை தொகுதியை காங்கிரஸ் கோரி வருகிறது. ஆனால் அதற்கு
வாய்ப்பில்லை என்று தெரிகிறது. எனவே குஷ்புவுக்கு சாதகமான தொகுதியாக பொள்ளாச்சி இருக்கும்
என்று கூறுகிறார்கள்.
எனவே குஷ்புவை பொள்ளாச்சியில் போட்டியிடுமாறு காங்கிரஸ் கேட்டுக்
கொள்ள உள்ளது. கவுண்டர்கள் அதிகம் உள்ள தொகுதியில் குஷ்பு போட்டியிட்டால் அங்கு அதிமுக
வேட்பாளர் உறுதி என்கிறார்கள்.