ஸ்லீவ் லெஸ் கவுன்! ஃப்ரீ ஹேர்! கூலர்! 48 வயதிலும் இளைஞர்களை ஈர்க்கும் குஷ்பு!

காங்கிரஸ் கட்சியின் முக்கிய அரசியல் பிரமுகரும் நடிகையுமான குஷ்பு சுற்றுலாவுக்கு லண்டன் சென்றுள்ளார். தற்போது அங்கு எடுத்த படங்களை வெளியிட்டுள்ளார்.


1980களில் குழந்தை நட்சத்திரமாக திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய குஷ்பு 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார்.

பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். 

வருஷம் 16 படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான குஷ்புவுக்கு தற்போது வயது 48. தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு திரைத்துறையில் தனக்கென முத்திரை பதித்தவர் குஷ்பு.

ரஜினி, கமல், பிரபு, சத்தியராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள குஷ்பு சின்னதம்பி, அண்ணாமலை, மன்னன், சிங்கார வேலன், மைக்கேல் மதன காமராஜன், நாட்டாமை உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களிலும் நடித்துள்ளார். தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளிலும் சீரியல்களிலும் கவனம் செலுத்தி வரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.  

தனது விடுமுறை நாட்களை செலவிட வகையில் லண்டனுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார் குஷ்பு. லண்டன் வீதிகளில் நின்றபடி செல்பி எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் குஷ்பு. வெள்ளைநிற ஸ்லீவ்லெஸ் கவுனில் ஃபிரி ஹேர் கூலிங்கிளாஸ் என கலக்கலாக இருக்கிறார். தனது பதிவில் குட்மார்னிங் ஃபிரம் லண்டன், பெஸ்ட் டைம்ஸ் வித் பெஸ்ட்டி என்றும் பதிவிட்டிருக்கிறார் குஷ்பு. 

48 வயதை கடந்த நடிகை குஷ்பு இன்னமும் வருஷம் பதினாறு படத்தில் பார்த்த கதாநாயகி போலவே உள்ளார். உடல் எடைதான் கொஞ்சம் கூடிவிட்டது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். குஷ்புவின் இந்த போட்டோவை பார்க்கும் ரசிர்கள் நதியா போலவே வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் மாறல அதுக்கு காரணம் என்னன்னு கேட்டு தொல்லைப் படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பல வருடங்களுக்கு முன்னர் மதுரையில் நடிகை குஷ்புவுக்காக கோயில் கட்டி வழிபட்டி ரசிகரை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறோம்.