கழட்டி விட்ட முன்னணி ஹீரோக்கள்! கீர்த்தி சுரேஷ் எடுத்த அதிர்ச்சி முடிவு!

முன்னணி ஹீரோக்கள் யாரும் கண்டு கொள்ளாத காரணத்தினால் ஹீரோயினை மையமாக வைத்து தயாராகும் புதிய படம் ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போவதாக, தகவல் வெளியாகியுள்ளது.


பழம்பெரும் சினிமா நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு சமீபத்தில் திரைப்படமாக வெளியிடப்பட்டது. அதில், நடிகை கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக அசத்தலாக நடித்திருந்தார். தெலுங்கில், மகாநடி என்றும், தமிழில் மகாநடிகை என்ற பெயரிலும் வெளியான இப்படம் நல்ல வசூலை ஈட்டியதுடன், பரவலான பாராட்டுகளையும் பெற்றது. 

ஹீரோயினை மையமாக வைத்து வெளிவந்த மகாநடி படத்தில் நடித்ததன் மூலமாக, கீர்த்தி சுரேஷின் சினிமா கேரியர் புதிய அந்தஸ்தை எட்டியுள்ளது. இந்த சூழலில், மீண்டும் ஹீரோயினை மையமாக வைத்து உருவாகும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போகிறாராம். நரேந்திரா இயக்கும் இந்த படத்தை, ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக, மகேஷ் கோனேரு தயாரிக்கிறார். இன்னமும் பெயரிடப்படாத சூழலில், இப்படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் முறைப்படி பூஜையுடன் தொடங்கியுள்ளது. 

இயக்குனர், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் கலந்துகொண்ட இந்த பூஜையில், நடிகர் கல்யாண் ராம் கிளாப் அடிக்க, முதல் காட்சி  படம் பிடிக்கப்பட்டது. இந்த தகவலை கீர்த்தி சுரேஷ் உறுதிசெய்துள்ளார். இதுபற்றி தனது அதிகாரப்பூர்வ, டுவிட்டர் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், அவர் இப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.    

இதேபோன்று, தயாரிப்பாளர் மகேஷ் எஸ் கோனேரு புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், வலுவான வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த படம் கீர்த்தி சுரேஷின் சினிமா வாழ்க்கையில் முக்கிய இடம் பிடிக்கும்எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், படத்தின் கதை பற்றி தெரிவிக்கப்படவில்லை. 

பிப்ரவரி மாதம் முதல் இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெறஉள்ளதாகவும், பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் ஷூட்டிங் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதியில் படம் ரிலீஸ் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், விரைவில் இப்படத்தின் டைட்டில் ரிலீஸ் செய்யப்படலாம் என, படக்குழு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடைய விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வந்த கீர்த்தி சுரேஷ்க்கு கடந்த ஆண்டு வெளியான எந்த படமும் கமர்சியலாக சக்சஸ் ஆகவில்லை. சர்கார் படமும் கூட விஜய்க்காக தான் சக்சஸ் என்றானது. மேலும் சாமி 2 திரைப்படததின் படுதோல்வி கீர்த்தி சுரேசை ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்த வைத்துள்ளது. இதனால் முன்னணி ஹீரோக்கள், இயக்குனர்கள் கீர்த்தி சுரேசை ஓரம்கட்டியுள்ளனர். இதனால் தான் வேறு வழியில்லாமல் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.