சின்ன வயசுல இப்படி இருக்கிற இந்த பொன்னு இப்ப ஒரு பிரபல நடிகை!

பிரபல நடிகை ஒருவர் சிறு குழந்தையாக இருந்த போது எடுக்கப்பட்ட படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.


நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.  இவர் தயாரிப்பாளர் சுரேஷின் மகளாவார். கடந்த 2000ம் ஆண்டு முதலே திரைப்படங்களில் நடித்து வரும் இவர் கிட்டத்தட்ட மூன்று படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழில் 2015ஆம் ஆண்டு வெளிவந்த இது என்ன மாயம் படத்தில் அறிமுகமானார்.

 நாயகியாக அறிமுகமான பின்னர் ரஜினிமுருகன், தொடரி, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் என பல ஹிட் படங்களில் நடித்தார். சமீபத்தில் பழம்பெரும் நடிகை நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றார். தற்போது 26 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் அவர் சிறு வயதில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சிறு வயதில் எப்படி இருந்தாரோ அப்படித்தான் இப்போதும் கீர்த்தி இருக்கிறார் என்று ரசிகர்கள் அனைவரும் கூறி வருகின்றனர்.