மேடையில் நடிகர் கார்த்தியிடம் அத்துமீறி நடந்து கொண்ட கஸ்தூரி! வைரல் ஆகும் புகைப்படம்!

பாடல் வெளியீட்டு விழாவில் நடிகை கஸ்தூரி நடிகர் கார்த்தியிடம் அத்துமீறி நடந்து கொண்டது சர்ச்சையாகியுள்ளது.


ஜூலை காற்றில் எனும் படத்தில் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நடிகர் கார்த்தி பாடல்களை வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்து.

நிகழ்ச்சியை நடிகை கஸ்தூரி தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். மேடைக்கு கார்த்தியை அழைத்த கஸ்தூரி அவருடன் நெருக்கமாக நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

அப்போதே கஸ்தூரி ஏதோ திட்டத்துடன் செல்ஃபி எடுப்பதாக சர்ச்சையானது. அதுமட்டும் இன்றி பேசும் போது, நல்ல வேலை சிவக்குமார் இல்லாத போது கார்த்தியுடன் செல்பி எடுத்துக் கொண்டே என்று கஸ்தூரி பேசிவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்தி, நிகழ்ச்சியில் பேசும் போது ஏன் இப்படி அத்துமீறி ஒருவருடன் செல்பி எடுக்கிறீர்கள் என கஸ்தூரியின் பெயரை குறிப்பிடாமல் கேட்டார். மேலும் ஒருவர் விரும்பவில்லை என்றால் அவரை தொந்தரவு செய்யக்வடாது என்றும் கூறினார்.

இதனை தொடர்ந்து நடிகை கஸ்தூரிக்கு எதிராக சமூகவலைதளங்களில் கருத்து கூற பலரும் புறப்பட்டனர். நடிகை கஸ்தூரி வேண்டும் என்றே கார்த்தியை சீண்டி விளம்பரம் தேடிக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது.