துடியாய் துடிக்கும் அதிமுக வேட்பாளர்! ஆசை காட்டி மோசம் செய்த கஸ்தூரி!

நடிகை கஸ்தூரி மதுரை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ் சத்யனை கிறங்கடிக்க முயற்சி மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.


விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்டோரின் ஹாட் ஜோடியாக ஒரு காலத்தில் வலம் வந்த கஸ்தூரி, கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசியலில் தலைகாட்டி வருகிறார்.  தனது கருத்துக்களால் சில நேரங்களில் கண்டங்களையும், வேறு சில நேரங்களில் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

அந்த வரிசையில் ஆளும் கட்சி முக்கியப் பிரமுகரின் மகனும் மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான ராஜ்சத்யனை புகழந்து தள்ளி கிறக்கத்துக்குள்ளாக்கியிருக்கிறார். ராஜ் சத்யன் மிக மிக நல்லவர் என்றும், தன்னை கட்சியின் பிரசார பீரங்கியாகவும் எடுத்துக் கொள்ளலாம். என கஸ்தூரி ஒரு அறிக்கை வெளியிட்டார். 

இதனை அறிந்த சத்யன் கஸ்தூரி மேடமே தன்னை புகழ்ந்து, பிரசாரம் செய்கிறாரா என கிறுகிறுத்து சொக்கிப் போய் விட்டாரம். அவரை அவரது தந்தையும், எம்.எல்.ஏவும் முன்னாள் மேயருமான ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் எச்சரிக்கைப்படுத்த வேண்டியிருந்ததாகவும் கூறப்படுகிறது.