முதலில் ஸ்ருதி! தற்போது கஸ்தூரி! விஜய் சேதுபதி அடுத்தடுத்து கொடுக்கும் வாழ்க்கை!

நடிகை கஸ்தூரி ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த நடிகை ஆவார். தற்போது 43 வயதான அவருக்கு ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு கட்டழகு இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே.


 திருமணமான பின்னர் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை.  இதன் காரணமாக வாய்ப்புகள் தேடி சமீப காலமாக சற்று நெகட்டிவ் பப்ளிசிட்டி செய்து வந்தார். குறிப்பாக டுவிட்டர் தளத்தில் முன்னணி நடிகர்களை சீண்டுவது, சமூக பிரச்சனைகளில் தேவையில்லாத சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பது என்று நெகட்டிவ் பப்ளிசிட்டி தேடி வந்தார் கஸ்தூரி.

இந்நிலையில் அந்த பப்ளிசிட்டிக்கு தற்போது அவருக்கு பலன் கிடைத்துள்ளது. அவர் தனியாக ஒரு போலீஸ் அதிகாரியாக EPCo302  என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சலங்கை துரை இயக்குகிறார்.  இந்த படத்தின் பிரமோஷன் விழா நேற்று நடைபெற்றது மேலும் இந்த படத்தில் யார் தனக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது என்றும் பேசியுள்ளார் கஸ்தூரி..

 குறிப்பாக இந்த கேரக்டர் தனக்கு கிடைப்பதற்குக் காரணம் விஜய் சேதுபதிதான் என்று தைரியமாக கூறியுள்ளார் கஸ்தூரி. ஆனால் நம் அனைவருக்கும் தெரியும் இவர் கொடுத்த அந்த நெகட்டிவ் பப்ளிசிட்டியால் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது என்று.