நோய்வாய் பட்ட மகளை தவிக்க விட்டுவிட்டு பிக்பாஸ் வீடு! காரணம் பணமா? புகழ் வெறியா?

நடிகை கஸ்தூரி தனது மகளை தவிக்க விட்டுவிட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருப்பதன் மூலமாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.


தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி அதாவது சீசன் ஒன் துவங்கியது முதலே அதில் போட்டியாளராகப்போகிறார் என்று கூறப்பட்டு வந்தவர் நடிகை கஸ்தூரி. அதிலும் சீசன் ஒன்றின் போது நடிகை கஸ்தூரி கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார் என்று கூறினர்.

பிறகு வைல்ட் கார்டு என்ட்ரி மூலமாக கூட கஸ்தூர் செல்வார் என்று பேசப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இதே போல் சீசன் 2விலும் கூட கஸ்தூரி பெயர் பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டியலில் பேசப்பட்டது. 

2வது சீசனிலும் கூட கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவில்லை. 3வது சீசன் துவங்கிய போதும் கஸ்தூரி வீட்டிற்குள் செல்வார் என்று சொன்னார்கள். அதன்படி தற்போது வைல்ட் கார்டு என்டிரியாக கஸ்தூரி உள்ளே சென்றுள்ளார்.

இது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. காரணம் என்ன என்றால் முதல் சீசனில் ஏன் பங்கேற்கவில்லை என்று கஸ்தூரியிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. ஆனால் 2வது சீசனின் போதும் இதே கேள்வி கஸ்தூரியிடம் எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த கஸ்தூரி தனக்கு ஒரு மகள் இருப்பதாகவும், கணவன் இருப்பதாகவும், ஒரு வீடு இருப்பதாகவும் இவர்களை எல்லாம் பிரிந்து மாதக்கணக்கில் தன்னால் எப்படி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல முடியும்? அந்த அளவிற்கு நான் என்ன குடும்பத்தின் மீது பிடிப்பு இல்லாதவரா? என்கிற ரேஞ்சில் கஸ்தூரி பேசியிருந்தார்.

மேலும் தனது மகளுக்கு உடல் ரீதியாக சில பிரச்சனைகள் இருந்ததாகவும் எனவே அவளை தனியாக விட்டுவிட்டு செல்வதற்கு வாய்ப்பு இல்லை என்று கஸ்தூரி கூறியிருந்தார். நேற்று நிகழ்ச்சியின் போது இதே தகவலை கஸ்தூரி கூறியிருந்தார். 

அதாவது தனது மகள் நோய்வாய் பட்டிருந்த போது மூன்று ஆண்டுகள் தான் சாப்பாடு தண்ணிர் என எதுவுமே இல்லாமல் உயிர் வாழ்ந்ததாகவும் தனது மகளை பார்த்து தினம் தினம் துடித்ததாகவும் கூறியிருந்தார்.

இப்படி இருக்கையில் அப்படி ஒரு மகளை விட்டுவிட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார் என்றால் கஸ்தூரிக்கு அதிக அளவில் சம்பளம் பேசப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள். அப்படி இல்லை என்றால் கஸ்தூரி அண்மைக்காலமாக புகழ் வெளிச்சத்தில் இருக்க விரும்புகிறார் அதற்காக பிக்பாஸ் வீட்டை பயன்படுத்தியிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.