கூட்டத்தில் பிரபல நடிகையின் பின்னழகை கிள்ளிய ரசிகர்! அப்புறம் நடந்தது என்ன தெரியுமா?

கூட்டத்தில் தனது பின்னழகை ரசிகர் ஒருவர் கிள்ளியதாக நடிகை ஒருவர் கூறியுள்ளார்.


   தமிழில் தாம் தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருப்பவர் கங்கனா. அந்த படத்தில் வரும் அன்பே என் அன்பே பாடல் தெரியாத தமிழ் ரசிகர்களே இருக்க முடியாது. ஆனால் அதன் பிறகு தமிழ் படம் எதிலும் கங்கனா நடிக்கவில்லை. அதே சமயம் இந்தியில் தற்போது முன்னணி நடிகையாக கங்கனா வலம் வருகிறார்.

   பெரும்பாலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள மற்றும் கதையின் நாயகியாக மட்டுமே கங்கனா நடித்து வருகிறார். மரத்தை சுற்றி டூயட் பாடும் கதாபாத்திரங்களில் கங்கனா நடிப்பதில்லை. கதைக்கு தேவை என்றால் முத்தக்காட்சி, படுக்கை அறை காட்சி போன்றவற்றில் கூட கங்கனா புகுந்து விளையாடுவார்.

  தற்போது கங்கனா ஜான்சி ராணியின் வாழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள மணிகர்னிகா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கங்கனாவே இயக்கவும் செய்துள்ளார். பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள மணிகர்னிகா படம் வரும் 26ந் தேதி வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு அந்த படத்தை விளம்பரம் செய்வதில் கங்கனா தீவிரமாக உள்ளார்.

   இதற்கான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனாவிடம் பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்க தற்காப்புக் கலைகளை பெண்கள் கற்க வேண்டுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு நிச்சயமாக பெண்கள் கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வது நல்லது என்று கங்கனா கூறினார்.

  ஏனென்றால் பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள துணிச்சலுடன் சண்டையும் தெரிந்திருக்க வேண்டும். இல்லை என்றால் தொந்தரவு செய்யும் ஆண்களை பெண்களால் ஒன்றுமே செய்ய முடியாது. ஒரு நாள் நான் படப்பிடிப்பில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தேன்.

   அப்போது எனது பின்னழகை யாரோ வருடுவது போல் இருந்தது. பின்னர் என் பின்னழகை தனது விரல்களால் ஒருவர் கிள்ளினார். யார் என்று நான் பார்த்த போது அந்த நபர் ஏளனமாக சிரித்துக் கொண்டு நின்றார். அநேகமாக படப்பிடிப்பை பார்க்க வந்த ரசிகராக அந்த நபர் இருக்கலாம்.

  என்னால் அப்போது என் பின்னழகை கிள்ளிய நபரை ஒன்னும் செய்ய முடியவில்லை. காரணம் எனக்கு அந்த நபரை எதிர்கொள்ள தெரியாது. இதுவே தற்காப்பு கலை தெரிந்திருந்தால் நிச்சயம் அந்த நபரை தாக்கியிருப்பேன். இவ்வாறு கங்கனா கூறியுள்ளார்.