1 படத்தில் நடிக்க கவர்ச்சி நடிகைக்கு ரூ.24 கோடி! அஜித், விஜய் சம்பளத்தை மிஞ்சினார்!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க கங்கனா ரனாவத் பெரும் சம்பளத் தொகை எவ்வளவு தெரியுமா? கேட்டால் அதிர்ந்து போவீர்கள்?


நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட்டில் பெரும் அசைக்க முடியாத சக்தியாக மாறி வருகிறார். கடந்த 2007ம் ஆண்டு தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் படத்தில் நடித்து இருந்தார் கங்கனா.

அப்போது இருந்தே கவர்ச்சிக்குப் பெயர் போனவர் இவர். பாலிவுட்டில் கவர்ச்சி. நடிப்பு, பாடல், என அனைத்திலும் அசத்தினார். தற்போது தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் தயாராகி வருகிறது.

இந்த படத்தினை இயக்குனர் ஏஎல் விஜய் இயக்க திரைக்கதையை கேவி விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். இந்த படத்தில் நடித்த கங்கனா ரணாவத் ஒப்பந்தமாகியுள்ளார் . ஜெயலலிதாவாக கங்கனா நடிக்கிறார்.

ஆனால் இந்த படத்தில் நடிக்க அவருக்கு சம்பளத் தொகை எவ்வளவு கொடுக்கப்படுகிறது தெரியுமா? சுமார் 24 கோடி ரூபாய் அவருக்கு இந்த படத்தில் நடிக்க சம்பளமாக கொடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வேறு எந்த ஒரு நடிகைக்கும் இவ்வளவு கோடி தொகையை சம்பளமாக கொடுக்க பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமிழ் திரையுலகில் முன்னணியில் உள்ள விஜய், அஜித்துக்கு கூட ஒரு படத்திற்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் தமிழே தெரியாத கங்கனாவுக்கு 24 கோடி ரூபாய் கொடுக்கிறார்கள்.