என் கணவர் பெண்களிடம் கொஞ்சம் அப்படி இப்படி தான் இருப்பார்! பிரபல நடிகை ஷாக் தகவல்!

அஜய் தேவ்கன் மற்றும் காஜோல் இருவரும் பாலிவுட் நடிகர்கள் ஆவார்கள்.இவர்கள் பிப்ரவரி 24, 1999 முதல் திருமணம் செய்து கொண்டனர்.


அஜய் தேவ்கன் - கஜோல் இருவருமே தற்போதும் நடித்து வருகின்றனர். அதிலும் கஜோல் தற்போது திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனார். இந்த நிலையில் அவரது கணவர் அஜய் தேவ்கன் நடிப்பில் ஒரு இந்திப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இது குறித்த நிகழ்ச்சியில் கஜோல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த படத்தில் திருமணமான அஜய் தேவ்கன் இளம் பெண் ஒருவருடன் மனைவிக்கு தெரியாமல் சேர்ந்து வாழ்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் படத்தில் பெண்களை பார்த்து வழியும் கேரக்டரிடம் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். நிஜ வாழ்க்கையில் அஜய் தேவ்கன் எப்படி என்று கஜோலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த கஜோல், அனைத்து ஆண்களையும் போல தனது கணவரும் அழகான அம்சமான பெண்கள் என்றால் பார்க்கத்தான் செய்வார், மேலும் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கத்தான் செய்வார். இதெல்லாம் சகஜம் என்று நான் கடந்து சென்றுவிடுவேன் என்று பதில் அளித்து அதிர வைத்துள்ளார்.