மேடையில் கட்டித் தழுவி முத்தம்! ஒளிப்பதிவாளரின் செயலால் கதறி அழுத காஜல் அகர்வால்!

மேடையில் திடீரென ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடு கட்டிப்பிடித்து முத்தமிட்டதால் நடிகை காஜல் அகர்வால் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார்.


கவச்சம் எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் மெஹ்ரீன் தாரிகா எனும் நடிகையும் படத்தில் உள்ளார். கவச்சம் படத்தின் டீசர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. டீசர் குறித்து படத்தில் பணியாற்றிய அனைவரும் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் நடிகை காஜல் அகர்வால் மேடையில் ஏறி கவச்சம் படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.

   அப்போது கவச்சம் படத்தின் ஒளிப்பதிவாளரான சோட்டா கே நாயுடு திடீரென மேடையில் ஏறினார். அவர் மேடை ஏறி வருவதை நடிகை காஜல் அகர்வால் கவனிக்கவில்லை. மேடையில் பேசிக் கொண்டிருந்த காஜலை நெருங்கிய சோட்டா கே நாயுடு கண் இமைக்கும் நேரத்தில் அவரை கட்டிப்பிடித்தார். வழக்கமாக மரியா தை நிமித்தமான கட்டிப்பிடிப்பு என்று நினைத்து காஜல் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

   அப்போது யாரும் எதிர்பாராத வகையில் காஜல் இடுப்பை வளைத்து பிடித்து சோட்டா கே நாயுடு கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டார்.இதனால் ஒரு நிமிடம் நிலை குலைந்து போன காஜல் அப்படியே மைக்கை வைத்துவிட்டு ஓரமாக ஒதுங்கிக் கொண்டார். மைக்கை எடுத்த சோட்டா கே நாயுடு இசை அமைப்பாளர் தமன் தான் தன்னை காஜலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்குமாறு சவால் விடுத்ததாகவும் அந்த சவாலில் தான் ஜெயித்துவிட்டதாகவும் கூறினார்.   இதனை கேட்டு பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் மேடையில் இருந்து இறங்கிய காஜல் அகவர் கண்கள் கலங்கிய நிலையில் தனது அறைக்கு சென்று கதறி அழுததாக கூறப்படுகிறது. அப்போது அறைக்கு சென்ற ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடு காஜலை தனது குடும்ப உறுப்பினராக கருதி பாசத்தில் முத்தமிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.For More NEWS CLICK BELOW LINK

TIMES TAMIL

TIMES TAMIL TWITTER PAGE

TIMES TAMIL FACEBOOK PAGE