விஜயுடன் நடிக்க கூப்டாங்க! முடியாதுன்னு சொல்லிட்டேன்! ஜோதிகா சொல்லும் மெர்சல் சீக்ரெட்!

மெர்சல் படத்தில் சில காட்சிகள் எனக்கு சரியாக படாத காரணத்தினால் நடிக்கவில்லை என்று ஜோதிகா கூறியுள்ளார்.


சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின், நடிப்பில் இருந்து விலகியிருந்த ஜோதிகா, 36வயதினிலே என்ற படத்தின் மூலமாக மீண்டும் திரை உலகிற்கு திரும்பினார். தற்போது, ராதா மோகன் இயக்கத்தில் காற்றின் மொழி என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே, ராதா மோகன் இயக்கிய மொழி படத்தில் நடித்ததன் மூலமாக பரவலான பாராட்டுகளை ஜோதிகா பெற்றது இங்கே குறிப்பிடவேண்டிய விசயமாகும். 

தற்போது, காற்றின் மொழி படத்தில் திருமணமான ரேடியோ ஜாக்கி வேடத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். இது கதையம்சத்துடன் உள்ள படம் என்றும், இதற்கு நல்ல பாராட்டு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். இதுதவிர, ராட்சஸி என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் ஜூலை 5ம் தேதி ரிலீசாகிறது. இதில், அரசுப் பள்ளி ஆசிரியை வேடத்தில் ஜோதிகா அசத்தலாக நடித்துள்ளதாக, படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. 

இந்நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஜோதிகா, விஜய் நடித்த மெர்சல் படத்தில், நித்யா மேனன் வேடத்தில் நடிக்க முதலில் என்னிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், சில கிரியேட்டிவ் காரணங்களால், நான் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன்.

சில காரணங்களை கூறி சரி செய்யுமாறு கேட்டேன் ஆனால். அதற்கு மெர்சல் படக்குழு தயாராக இல்லை. இதனால் நான் நடிக்க முடியாது என்று கூறிவிடடேன் என்று ஜோதிகா தெரிவித்துள்ளார். 

ஜோதிகாவும், விஜயும் ஏற்கனவே குஷி, திருமலை ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். மெர்சல் படத்தில் இணைந்து நடித்திருந்தால் அது தங்களது கேரியரில் மற்றொரு மைல் கல்லாக அமைந்திருக்கும் என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்.