அண்ணியுடன் முதல் முறையாக..! த்ரில் அனுபவம்! மனம் திறந்த நடிகர் கார்த்தி!

அண்ணன் மனைவி ஜோதிகாவுடன் முதல் முறையாக நடிக்க உள்ளது குறித்து நடிகர் கார்த்தி மனம் திறந்துள்ளார்.


சூர்யா பல வருடங்களுக்கு முன்னர் இருந்தே படங்களில் நடித்து வந்தாலும் நடிகர் கார்த்திக் கடந்த பத்து வருடங்களாக மட்டுமே நடித்து வருகிறார். சூர்யா தன்னுடன் நடித்த நடிகை ஜோதிகாவை கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் சமீபத்தில் தனது அப்பா அம்மா பார்த்து வைத்த கண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தனது அணியான ஜோதிகாவுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தை திரிஷ்யம் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்குகிறார்.  இந்த படத்தில் ஜோதிகாவிற்கு கார்த்திக் தம்பியாக நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இது குறித்து நடிகர் கார்த்தி மனம் திறந்த தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.

அதாவது முதல் முறையாக அண்ணியுடன் இணைந்து நடிக்கும் த்ரில் அனுபவம் தனக்கு கிடைத்துள்ளதாக கார்த்தி கூறியுள்ளார். அதே சமயம் இது பற்றி தற்போது வரை ஜோதிகா எதுவும் கூறவில்லை.