பிரபல நடிகை மீது அதிவேகத்தில் மோதி ஆட்டோ! காயத்துடன் தப்பிய அதிசயம்!

பிரபல நடிகையான ஜெயஸ்ரீ சிவதாஸ் விபத்தில் சிக்கினார். சிறு காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.


மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜெயஸ்ரீ சிவதாஸ். 1948 காலம் பரஞ்சத், நித்ய ஹரித நாயகன், நிவின் பாலி உடன் ஆக்ஷன் ஹீரோ பிஜூ ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

 

15 ஆண்டுகளுக்கு முன் கேரள மாநிலத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற விருதையும் ஜெயஸ்ரீ சிவதாஸ் பெற்றிருக்கிறார். தமிழில் மரகத காடு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.

 

இத்திரைப்படம் வரும் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடிகை கேரள மாநிலம் மூணாறில் ஒரு விபத்தை சந்தித்துள்ளார்.

 

தனது காரில் ஏறுவதற்காக ஜெயஸ்ரீ சிவதாஸ் தயாரானபோது, பின்னால் வந்த ஆட்டோ ஒன்று இவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த நடிகைக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

 

இதைத்தொடர்ந்து அந்த நடிகை கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.