அஜித் இன்னுமா நடித்துக் கொண்டிருக்கிறார்? பிரபல நடிகையின் செமத்தனமான கிண்டல்!

பாலிவுட் நடிகை இஷா கோபிகரை, ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.


இஷா கோபிகர் , சிவகார்த்திக்கேயனுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சயின்டிஃபிக் த்ரில்லர் கதையம்சம் உள்ள இந்த படத்தை ஆர். ரவிக்குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.

அப்போது, ‘’நடிகர் சிவகார்த்திக்கேயன் பார்ப்பதற்கு ரஜினிகாந்த் போலவே உள்ளார். அவருடன் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் சினிமாவில் எனக்கு அஜித் போன்ற சில நடிகர்களை பற்றித்தான் தெரியும். இன்னமும் அஜித் இங்கே நடிக்கிறாரா எனத் தெரியாது,’’ என்று இஷா கோபிகர் குறிப்பிட்டார். 

இந்த பேட்டி தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், ரஜினியுடன் சிவகார்த்திக்கேயனை எப்படி ஒப்பிடலாம் என, ரஜினி ரசிகர்கள் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர். இதேபோல, அஜித் எவ்வளவு பெரிய நடிகர், அவரை பற்றி தெரியாமல் பேசலாமா, என அஜித் ரசிகர்கள் காட்டமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

நெஞ்சினிலே எனும் படத்தில் விஜயுடனும், நரசிம்மாவில் விஜயகாந்துடனும் நடித்து புகழ்பெற்றவர் இஷா கோபிகர். என் சுவாசக் காற்றே எனும் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பார்த்தவர்கள் இஷா கோபிகரை தெரியாமல் இருக்கமாட்டார்கள்.