என் 15 வயதில் என் வகுப்பு ஆசிரியரை காதலித்தேன்! நடிகை வெளியிட்ட டாப் சீக்ரெட்!

முத்தம் கூட எப்படி தருவது என தெரியாத பருவத்தில் நண்பனை காதலித்ததாக நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.


முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகி வரும் தலைவி என்ற பெயர் வைக்கப்பட்ட படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கங்கனா ரணாவத். 

இவர் ஏற்கனவே தமிழில் தாம் தூம் படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர். தற்போது தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கனா ரணாவத் “எனக்கு அறியாத வயதில் ஆசிரியர் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. அப்போது எனக்கு வயது 15. ஆனால் என் தோழி ஒரு பையனை காதலிப்பது போலவே, நானும் என்னுடைய நண்பனை காதலிப்பதாக கூறினேன்.

ஆனால் அதற்கு அவன் என்னை பார்த்து நீ ரொம்ப சின்ன பொண்ணு, இதெல்லாம் சரிபட்டு வராது என கூறினான். நான் மிகவும் வேதனை அடைந்தேன். அதன்பிறகு பலமுறை அவனுக்கு செல்போனில் மெசேஜ் செய்தேன். பின்னர் ஒருவழியாக என்னுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் என்னுடன் பழக ஆரம்பித்தான்.

பின்னர் இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு சுற்றித் திரிந்தோம். அந்த சமயத்தில் எனக்கு முத்தம் கொடுப்பது எப்படி என்பது கூட சரியாக தெரியயாது. அவனுக்கு முத்தம் கொடுக்க நினைத்து எனது உள்ளங்கையில் முத்தம் கொடுத்து பயிற்சி எடுத்தேன். வயது குறைவு என்பதால் காதலில் சரியான புரிதல் இல்லாமல் இருந்தது என கூறினார்.

இந்த செய்தியை நம்பும்படியாக இல்லை என நீங்கள் கூறினாலும், சொல்ல வேண்டியது எங்களது கடமை.