உள்ளாடை விளம்பரத்தில் தோனி நடிகையின் ஆபாச போஸ்! ரசிகர்கள் செம குஷி!

உள்ளாடை விளம்பரத்திற்காக நடிகை திஷா படானி கொடுத்துள்ள ஆபாச போஸ் அவரது ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.


மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் எம்.எஸ். தோனி த அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் நடித்தவர் திஷா படானி. படத்தில் தோனியின் முதல் காதலியாக இவர் நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் திஷா படானி அறிமுகம் ஆனவர் தான். சுந்தர் சி இயக்க உள்ள வரலாற்று திரைப்படமான சங்கமித்ராவிலும் திஷா படானி தான் நடிக்க உள்ளார்.

 

   சமூக வலைதளங்களில் அதிக ஆர்வம் கொண்ட திஷா படானி அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பது வழக்கம். நீச்சல் உடை, மாடர்ன் உடை என திஷா படானி விதவிதமான உடைகளில விதவிதமான போஸ் கொடுத்து வெளியிடும் புகைப்படங்களுக்காகவே அவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமானவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். 

   கடந்த வாரம் கூட இவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் சர்ச்சையானது. புகைப்படத்தில் உடல் பாகங்களை திஷா படானி அதிகம் காட்டுவதாக ரசிகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமென்ட் இடுவதை திஷா படானி நிறுத்தி வைத்தார். இந்த நிலையில் கடந்த வாரம் வெளியிட்ட புகைப்படத்தை காட்டிலும் பல மடங்கு அதிக ஆபாசத்துடன் வேறு ஒரு புகைப்படத்தை திஷா படானி வெளியிட்டுள்ளார்.


 

   கால்வின் கிளெய்ன் எனும் நிறுவனத்தின் உள்ளாடை விளம்பரத்திற்காகவே திஷா படானி இந்த போஸ் கொடுத்துள்ளார். இந்த ஒரே ஒரு போசுக்கு திஷா படானிக்கு கால்வின் கிளெய்ன் நிறுவனம் சுமார் 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சிலர் உற்சாகமாக வரவேற்றாலும் சில ரசிகர்கள் முகம் சுழித்தபடி கமென்ட் செய்கின்றனர்.